செவ்வாய், 4 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (10:17 IST)

வட கொரிய அதிபரின் மக்களுக்கான புத்தாண்டு செய்தி!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு செய்தியினை வெளியிட்டுள்ளார்.

உலக நாடுகளில் இருந்து தொடர்ந்து வட கொரியா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டே வருகிறது. முன்னதாக வடகொரியா ஆயுத சோதனைகள் நடத்தியதால் அமெரிக்காவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில், வடகொரியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையிலும் தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என தொடர்ந்து வடகொரியா கூறி வந்த நிலையில், சமீபத்தில் தான் கொரோனா பாதிப்புகளை ஒத்துக் கொண்டது. இந்நிலையில் வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு செய்தியினை வெளியிட்டுள்ளார். அதில் ‘பொதுமக்களின் தினசரி பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். கொரோனா நாம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால். அதனை எதிர்கொள்வதற்கு கூடுதல் நடவடிக்கை எடுக்கும். கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டிருப்பது, வட கொரியா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.