திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (14:49 IST)

சிலந்தியை வைத்து கொசுவை அழிக்க ஸ்கெட்ச்: ப்ளான் சக்சஸ்!

சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூஞ்சையை வெளியிட வைத்து மலேரியாவை பரப்பும் கொசுக்களை பெருமளவில் அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா கொசுக்களின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.
 
கொசுக்களின் இனத்தையே அழிப்பது தங்களது நோக்கமில்லை என்றும், மலேரியாவின் பரவலை தடுப்பதில் பங்கெடுக்கவே விரும்புவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.
 
பெண் கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை குடிப்பதன் மூலம் பரவும் மலேரியாவினால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 4,00,000 பேர் உயிரிழக்கின்றனர்.
 
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவினால் உலகம் முழுவதும் 219 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.