புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 மே 2019 (13:54 IST)

கொசுரு கொடுத்துட்டு, கூடுதல் டேட்டாவாம்... ஏர்டெல் போங்கு!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட  ரீசார்ஜ் மீது கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஜியோவுக்கு போட்டியாக சலுகைகளை வழங்கி வரும் ஏர்டெல் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. 
 
அதன்படி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் பயனர்கள் ரூ.399, ரூ.448 மற்றும் ரூ.499 விலை சலுகைகளை தேர்வு செய்யும் போது தினமும் 400 எம்பி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. 
1. ரூ.399-க்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 1.4 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
2. ரூ.448-க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 1.9 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
3. ரூ.499-க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 400 எம்பி கூடுதல் டேட்டாவோடு 2.4 ஜிபி டேட்டா வழங்கப்படும்.  
 
இந்த மூன்று ரீசார்ஜ் திட்டங்களில் மற்ற சேவைகளான எஸ்.எம்.எஸ், வேலிடிட்டி ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடத்தக்கது.