வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (14:13 IST)

சூப்பர் ஸ்டார் சர்ச்சையில் ரஜினி ரசிகர்களிடம் சிக்கிய விஷ்ணு விஷால்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தன் 69 வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி நடந்த விருந்து நிகழ்ச்சியில் இதில், சூர்யா, அமீர்கான்,  உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் அமீர்கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அதில், “சூப்பர் ஸ்டார்கள் சூப்பர் ஸ்டார்களாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.

இதில் சூப்பர் ஸ்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததை அடுத்து ரஜினி ரசிகர்கள் விஷ்ணு விஷாலை விமர்சிக்கும் விதமாக “சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் ஒருவர் மட்டும்தான்” எனக் கூறிவந்தனர். இதையடுத்து அந்த பதிவில் “சூப்பர் ஸ்டார் என்பதற்குப் பதிலாக ஸ்டார்கள்” என மாற்றியுள்ளார் விஷ்ணு விஷால்.

மேலும் அதுபற்றி கூறியுள்ள விஷ்ணு விஷால் “நான் என்னுடைய பதிவை மாற்றியுள்ளதால் நான் பலகீனமானவன் என அர்த்தம் இல்லை. நான் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அனைவரையும் விரும்புபவன். நமக்கெல்லாம் ஒரே சூப்பர் ஸ்டார்தான்.  ஆனால் சாதனைப் படைத்தவர்கள் அனைவரும் என்னைப் பொறுத்தவரை சூப்பர்ஸ்டார்கள்” எனக் கூறியுள்ளார்.