செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (09:47 IST)

85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர்

வடக்கு ஜெர்மனியில் இரு வேறு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 
நீல்ஸ் ஹோகெலின் இந்த கொலைகள் ஒரு புரியாத புதிராக இருப்பதாக நீதிபதி செபாஸ்டியன் புர்மன் விவரித்துள்ளார்.
 
ஹோகெல் ஏற்கனவே தாம் செய்த இரண்டு கொலைகளுக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1999 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை தமது நோயாளிகளுக்கு இதய நோய் தொடர்பான மருந்துகள் கொடுப்பதை நிர்வகித்து வந்தார்.
 
42 வயதாகும் ஹோகெல், தாம் செய்த செயலுக்காக இறந்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.