செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 27 மார்ச் 2024 (13:38 IST)

தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள்..! சத்ய பிரதா சாகு..!!

Sathyapratha Sago
6.23 கோடி வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார். 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், மொத்த வாக்காளர்களில் 3.70 கோடி பேர் பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி பேர் உள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 லட்சம் பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். மொத்தம் 10,90547 புதிய இளைய வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கூறினார்
 
177 வாக்குச்சாவடிகள் கூடுதலாக இதுவரை உள்ளது என தெரிவித்த அவர்,  பொதுமக்கள் வாக்காளர்கள் ஏதேனும் புகார்கள் இருந்தால்  தெரிவிக்கலாம் என்று கூறினார். 

தமிழ்நாட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 69.70 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதில் 33.1 கொடியை பணமாக பறிமுதல் செய்துள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்தார்.


பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட செயலின் மூலம் புகார்களை அளிக்கலாம் என்றும் வாக்காளர் அட்டைகள் இல்லாமல் இருந்தாலும் 12 விதமான அரசு அடையாள அட்டைகளை வைத்து வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறினார்.