இந்தக் கிளிக்குதான் எத்தனை சோதனை? பாம்பு கடி, முகத்தில் துப்பாக்கிச் சூடு

parrot
Last Modified சனி, 4 மே 2019 (21:43 IST)
ஃப்ரெடி க்ரூகர் ஒரு கிளி.
 
ஏப்ரல் 16ம் தேதி ஆயுதம் தாங்கிய திருடர்களால் கொண்டு செல்லப்பட்ட இது, 3 நாட்களுக்கு பின்னர் பிரேசிலின் தெற்கிலுள்ள காஸ்காவெல் விலங்கியல் பூங்காவுக்கு திரும்பி வந்தது மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக இது வாழ்ந்து வந்த கூட்டுக்கு அருகில் வந்தடைந்திருந்தது.
இதனை திருடி சென்றபோது, பாம்பு கடியால் ஏற்பட்டதாக நம்பப்பட்ட காயத்திற்கு இந்த கிளி சிகிச்சை பெற்று வந்தது.
 
ஏறக்குறைய இறந்துபோகும் அளவுக்கு இந்த கிளி ரத்தம் சிந்தியிருந்தது.
 
அதுமட்டுமல்ல. விலங்கியல் பூங்காவுக்கு வருவதற்கு முன்னால், இது போதைப்பொருள் டீலர் ஒருவரோடு வாழ்நது வந்தது,
 
திரைப்பட கதாபாத்திரமான ஃப்ரெடி க்ரூகர் என்று இந்த கிளிக்கு பெயரிடப்பட்டிருந்தது.
 
2015ம் ஆண்டு காவல்துறையின் அதிரடி நடவடிக்கையின்போது, இந்த கிளியின் முகத்தில் சுடப்பட்டதால், முகம் சேதமடைந்தது,
 
அதன் காரணமாக, இந்த கிளி வலது கண் பார்வையை இழந்தது, அலகின் ஒரு பகுதி சேதமடைந்தது,
 
 
ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் மதிப்புடைய சர்டபூர்வமற்ற வர்த்தகம் நடைபெறுகிறது.
தன்னை திருடிச் செல்வது இந்த கிளிக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
 
இதற்கு ஏற்பட்டிருந்த காயங்கள் இயல்பான கிளியின் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து இதனை தடுத்துவிடவில்லை.
 
லாபகரமான சட்டபூர்வமற்ற வர்த்தகம்
 
இந்த கிளி காயங்கள் அடைந்திருந்ததை கண்டு, இதனை திருடி சென்றவர்கள் விடுவித்திருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றனர்.
 
"இதனை விற்பது கடினம். பிரெடியை அடையாளம் காண்பது எளிது என்பதால், மிக எளிதாக இனம்கண்டுவிட முடியும்" என்று இந்த உயிரியல் பூங்காவின் இயக்குநர் இலாயிர் டெட்டோனி பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
இந்நாட்டில் ஆண்டுக்கு மூன்று பில்லியன் டாலர் மதிப்புடைய சர்டபூர்வமற்ற விலங்கு வர்த்தகம் நடைபெறுவதாக விலங்குகள் கடத்தலுக்கு எதிரான தொண்டு நிறுவனமான ரென்டாஸின் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அதிக பார்வையாளர்கள்
 
உயிரியல் பூங்காவுக்கு வந்த பின்னர் இந்த கிளி பிற பறவைகளோடு முரட்டுத்தனமாக நடந்துகொண்டதால், அதனை தனியான கூண்டில் வைக்க வேண்யதாயிற்று என்று அதன் இயக்குநர் தெரிவித்தார்.
 
இன்னொரு கிளியை இது கொத்தி குதறிவிட்டது.
 
பிரெடி கடத்தப்பட்டது இந்த நகரில் நடைபெற்ற முதல் சம்பவமல்ல. முதலைகள் மற்றும் பிற கிளிகள் இந்த உயிரியல் பூங்காவில் இருந்து கடத்தப்பட்டுள்ளன.
 
இங்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அதிகம் செலவு செய்யப்பட வேண்டும் என்பதை இந்த திருட்டுக்கள் உணர்த்துகின்றன.
 
இந்த பிரெடி கிளி திருடப்பட்டது உயிரியல் பூங்கா பணியில் ஈடுபடுவதற்கு அதிகம் பேருக்கு ஆர்வமூட்டி, அதிகம் பேர் இதனை பார்வையிட வருவார்கள் என்று நம்புவதாக இந்த இயக்குநர் கூறியுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :