செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : திங்கள், 26 மார்ச் 2018 (17:37 IST)

பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: அவசியமா? பாதுகாப்பானதா?

பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.



பாலியல் சுகாதார சேரிட்டி புரூக் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தரவுகளும், காட்சியாக வழங்கப்பட்டுள்ள உதாரணங்களும், பெண்கள் வயதுக்கு வருகின்றபோது, அவர்களின் பிறப்புறுப்புகள் எவ்வாறு மாறுகின்றன என்பது பற்றிய அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.

பெண்களுக்கு தங்களின் உடல் பற்றிய நம்பிக்கையை வழங்குவதோடு, தங்களின் பிறப்புறுப்பை தங்கள் விருப்பப்படி தோன்ற செய்வதற்கு 'அழகு வடிவமைப்பு அறுவை சிகிச்சை' மேற்கொள்ள பெண்கள் விரும்புவதையும் இது தணிக்கும் என்று இந்த வசதியை உருவாக்கியுள்ள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய அறுவை சிகிச்சைகள் 18 வயதுக்கு கீழானோர் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.

வடிவத்தை மாற்றும் அல்லது பெண்ணின் பிறப்புறுப்பின் இதழ்களை அல்லது உதடுகளை சிறியதாக்குவதற்கு, தனிப்பட்ட மருத்துவர்களால் செய்யப்படுகின்ற பெரும்பான்மையான பெண் பிறப்புறுப்பு அழகு அறுவை சிகிச்சைகள் ஆயிரக்கணக்கான பவுண்ட்கள் செலவை உருவாக்குபவை.

பெண்ணின் பிறப்புறுப்பின் உதடுகளில் அசாதாரண நிலைமை அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துதல், அல்லது அவரது உடல் நலத்தை கெடுப்பதாக இருந்தால், தேசிய சுகாதார சேவையால் அவ்வப்போது ஓர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அழகுபடுத்துவதற்காக மட்டுமே பெண்களை இந்த அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பதற்காக மருத்துவ தொழில்துறை இயங்கவில்லை.

பிரிட்டன் தேசிய சுகாதர துறையின் புள்ளிவிபரங்களின்படி, 2015-16 ஆண்டு 18 வயதுக்கு கீழுள்ள 200க்கு அதிகமான பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் 'அழகு அறுவை சிகிச்சை' செய்துள்ளனர். அதில் 150 பேர் 15 வயதுக்கு கீழானோர் ஆவர்.



பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையின் சிகிச்சை மைய நிபுணரும், இந்த திட்டத்தின் துணை வழிநடத்துனருமான லுயிஸே வில்லியம்ஸ் இது பற்றி குறிப்பிடுகையில், இளம் பெண்கள் தங்களின் பிறப்புறுப்பின் தோற்றத்தை பற்றி புரிந்து கொள்ள இது வழிவகுக்கும்.

வயதுக்குவருகின்றபோது, பெண்களின் பிறப்புறுப்பு வளர்ச்சி, குறிப்பாக அவர்கள் அப்போதைய வளர்ச்சியை எவ்வாறு பார்ப்பார்கள் அல்லது உணருவார்கள் என்பது பற்றி புரிதல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

"பெண்ணின் பிறப்புறுப்பின் வடிவமும், அளவுகளும் வேறுபட்டதாக இருக்கின்றன என்றும், அவர்களுக்கு அறிவுரையும், ஆதரவும் வேண்டுமென்றால் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும் இது உறுதியளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று லுயிஸே வில்லியம்ஸ் தெரிவித்திருக்கிறார்.


ராயல் கல்லூரியின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் சிறப்பு மருத்துவரும், குழந்தை மற்றும் குமரப்பருவ மகப்பேறுக்கான பிரிட்டன் சொசைட்டியை சேர்ந்த மருத்துவ நிபுணருமான டாக்டர் நௌமி குரோஞ்ச் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், பெண்ணின் பிறப்புறுப்பை சிறப்பாக தோன்ற செய்ய அழகு அறுவை சிகிச்சை செய்வதற்கு எந்தவித அறிவியல் சான்றுகளும் இல்லை.

அதிலும் குறிப்பாக, இன்னும், உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வளரும் நிலையிலுள்ள பதின்ம வயதினரால் இந்த மாதிரியான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு அறிவியல் சான்றுகளே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

"இந்த ஆதரங்கள் பெண்களுக்கும், இளம் பெண்களுக்கும் தகவல்களை வழங்கும் என்றும், அவர்களின் பிறப்புறுப்பின் தோற்றம் தளித்தன்மையானது. அவர்களின் வாழ்க்கை முழுவதும் அதன் தோற்றம் மாற்றம் அடையக்கூடியது, அவ்வாறு அமைவதுதான் சாதரணமானதும், ஆரோக்கியமானதாகவும் ஆகும் என்பதை புரிய வைக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்" என்று நௌமி குரோஞ்ச் கூறியுள்ளார்.

பெண்ணின் பிறப்புறுப்பில் அழகு வடிவமைப்பு - என்ன தவறு நேரிடலாம்?

பெண்ணின் பிறப்புறுப்பை அழகு செய்வதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால் கீழுவரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம்.

ரத்தப்போக்கு
நோய்தொற்று
திசுக்களின் வடுக்கள்
பிறப்புறுப்புக்களின் உணர்திறன் குறைதல்
அறுவை சிகிச்சை ஏதேனும் மேற்கொண்டால் நேரக்கூடிய ஆபத்துகள் இவை:-

நரம்புகளில் ரத்த கட்டுதல்
மயக்க மருந்துக்கு மேசமான எதிர்வினை