கில்காமேஷ்: இராக் திரும்புமா திருடு போன வரலாற்றுக் காப்பியம்?

kilamesh
Sinoj| Last Modified வியாழன், 29 ஜூலை 2021 (23:42 IST)
அரிய வகை பழப்பெரும் பொக்கிஷமான கில்காமேஷ் (Gilgamesh) காப்பியத்தின் ஒரு பகுதி அமெரிக்க அதிகாரிகளால் சட்டபூர்வமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகின் பழம்பெரும் இலக்கியங்களில் ஒன்றான கில்காமேஷ் காவியத்தின் ஒரு பகுதியான இந்த அரிய கைப்பொருள் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய இராக்கை உள்ளடக்கிய பல பிராந்தியங்கள் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் அந்த காப்பியம் எழுதப்பட்டது.

அந்த காப்பியத்தை கிறிஸ்துவர் நடத்தி வரும் பிராண்ட் ஆன ஹாபி லாபி வாங்கவதற்கு முன்பாகவே அது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அந்த காப்பியத்தை வாஷிங்டன் டிசியில் உள்ள பைபிள் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக வாங்கப்பட்டுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தின் தலைவராகவும் அதற்கு நிதியை வழங்கி வருபவருமான அருட்தந்தை ஸ்டீவ் க்ரீன், கைவினைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளராகவும் இருக்கிறார். ஆனால், அரிய வகை பொக்கிஷங்கள் தொடர்பான பல சர்ச்சைகள் ஸ்டீவ் க்ரீனைச் சுற்றி தொடர்ந்து வலம் வருகின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 2003ஆம் ஆண்டில் இந்த காப்பியத்தை லண்டனில் ஒரு பழம்பெரும் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி வாங்கினார் என்றும் அவர் தவறாக ஆவணங்களுடன் காப்பியம் பற்றி குறிப்பிடாமல் வேறு பெயரில் அதை அமெரிக்காவுக்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதன்பின் பல கைகள் மாறிய பிறகு 2014ஆம் ஆண்டு இந்த கைவினைப் பொருள் கடைசியாக ஹாபி லாபியால் ஏலம் ஒன்றில் 1.76 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக வாங்கப்பட்டது.
ஆதிச்சநல்லூரை முக்கிய சின்னமாக எப்போது அறிவிக்கும் இந்திய அரசு?

பழங்கால ரோமானியர்கள் என்ன சாப்பிட்டார்கள்? - முதல் நூற்றாண்டு குறிப்புகள்
நியூயார்க்கின் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியின் தற்காலிக அட்டர்னி ஜாக்குலின் எம் காசுலிஸ், இந்த அரிய பழம்பெரும் பொக்கிஷம், அது உருவான இடத்திற்கு சென்று சேரும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கு முன்பு ஹாபி லாபி நிறுவனத்திற்கு 3மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டு அந்த நிறுவனம் வைத்திருந்த ஆயிரக்கணக்கான பழம்பொருட்களை திரும்ப அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

கைவினைப் பொருட்களை தான் வாங்க தொடங்கிய காலத்தில், பொருட்களை சேகரிக்கும் உலகம் குறித்து குறைந்த அளவே தமக்கு தெரியும் என்று ஸ்டீவ் க்ரீன் தெரிவித்தார். இந்த கலைப் பொருளின் பிறப்பிடம் உட்பட பிற தவறுகளை கண்டறியாமல் இருந்த தனது `முட்டாள்தனத்தை` நொந்து கொள்வதாகவும் கூறினார் ஸ்டீவ்.
இந்த கில்காமேஷ் காப்பியம் உருவாக்கப்பட்ட அதே காலகட்டத்திற்கு சொந்தமான, சுமார் 17 ஆயிரம் திருடப்பட்ட கைவினை பொருட்களை திரும்ப தருவதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டது என இராக்கின் கலாசாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைவினைப் பொருட்கள் இராக் பிரதமர் முஸ்டஃபா அல் காதிமியின் விமானத்தில் கொண்டு வரப்படும். இந்த வார தொடக்கத்தில்தான் இராக் பிரதமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கைவினைப் பொருட்களை மீட்டது ஒரு "மிகப்பெரிய நிகழ்வு" என்றும், எதிர்காலத்தில் இதே போன்று பல பொக்கிஷத்தைக் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பொக்கிஷங்களை மீட்க இயலும் என இரான் கலாசார துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கில்காமேஷ் வரலாறு

கில்காமேஷின் கதை 12 களி மண்தகடுகளில் எழுதப்பட்டிருந்தது. இன்றைய இராக் நாடு, சிரியா, துருக்கி, இரான் ஆகிய நாடுகளின் பகுதிகளை இணைத்த நிலப்பரப்பே மெசபடோமியா. கிரேக்க மொழியில் 'மெசபடோமியா' என்றால் இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள இடம் என்று பொருள். அந்த வகையில் மெசபடோமியா பெயர் காரணத்துக்கான இரு நதிகள் யூப்ரட்டீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆகும். உலகில் அனைத்து நாகரிகங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது நதிக்கரைகள்தான். அத்தகைய நாகரிகத்தின் ஊற்றாக அறியப்படும் மொசப்படோமியாவின் "உருக்" பகுதியை ஆண்ட மன்னர்களுள் முக்கியமானவர் கில்காமேஷ் (Gilgamesh).


இதில் மேலும் படிக்கவும் :