1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:57 IST)

காலியாகும் உலகின் மோசமான காஸா வனவிலங்கு சரணாலயம்

உலகின் மோசமான சரணாலயம் என்று கூறப்படும் காஸா வனவிலங்கு சரணாலயம் மூடப்படுகிறது. அங்கிருக்கும் வங்கப்புலி மட்டும் தென்னாப்ரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள 15 விலங்கள் இன்று ஜோர்டனுக்கு கொண்டு செல்லப்படும்.


 
 
மூன்று வெளிநாட்டு கால்நடை மருத்துவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், ஆஸ்திரிய நாட்டின் தன்னார்வ தொண்டு அமைப்பான -தி ஃபோர் பாஸ்' (The Four Paws ) என்ற அமைப்பும் காஸாவில் உள்ள ஒரு புலி, குரங்கு, பறவைகள் மற்றும் முள்ளம்பன்றிகள் ஆகியவற்றை கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.
 
காஸா வனவிலங்கு சரணாலயத்தில் 100-க்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தன. ஆனால் அவை தொடர் போர் மற்றும் பட்டினி காரணமாக இறந்துவிட்டன.
 
சரணாலயத்தின் உரிமையாளர் ஜியாத் அவெய்டா, இஸ்ரேலின் முற்றுகையால் தான் பராமரிப்பு பிரச்சினைகள் ஏற்பட்டது என குற்றம் சாட்டினார்.