புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:05 IST)

சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்..

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்:
 
ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோதாவை அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைப்பு, சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான சிறைத்தண்டனை அறிமுகம் உள்ளிட்ட பல விடயங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
 
ஐ.நாவின் சிரியாவுக்கான தூதர் ஸ்டஃபன் டி மிஸ்டுரா, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ மற்ற கூட்டம் ஒன்று சிரியா போர் குறித்த பதற்றத்தை தணிக்க உதவியதாக தெரிவித்தார்.
 
பதற்றம் தணிந்தது:
 
ஐ.நாவின் சிரியாவுக்கான தூதர் ஸ்டஃபன் டி மிஸ்டுரா , ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ மற்ற கூட்டம் ஒன்று சிரியா போர் குறித்த பதற்றத்தை தணிக்க உதவியதாக தெரிவித்தார்.
 
ரஷியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பிளவால், இந்த உலகம் மிகவும் ஆபத்தான தருணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அவர் உணர்ந்ததாக தெரிவித்தார். இருப்பினும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அந்த கூட்டம் பதற்றத்தை குறைத்தாக தெரிவிக்கிறார்.