புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (14:16 IST)

வருடம் முழுவதும் WFH அறிவித்த கூகுள், ஃபேஸ்புக்!!

கூகுள், ஃபேஸ்புக் ஊழியர்கள் இந்தாண்டு இறுதிவரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது. 
 
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக், இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
 
ஜூன் 1 ஆம் தேதிவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய கூகுள் நிறுவனம் கூறியிருந்தது. தற்போது பணியாளர்களால் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஃபேஸ்புக் நிறுவனம் ஜுலை 6 ஆம் தேதி தங்கள் நிறுவனத்தை திறக்க உத்தேசித்திருந்த நிலையில், பணியாளர்கள் விரும்பும் பட்சத்தில் இந்த ஆண்டு இறுதிவரை அவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்யலாம் என்று அறிவித்துள்ளது.