வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 4 மே 2020 (11:55 IST)

ஃபேஸ்புக் வரிசையில் சில்வர் லேக்: அம்பானிக்கு அடிக்கும் லக்!!

சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. 
 
ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்குவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.  
 
அந்த செய்திகள் உண்மையாகும் வகையில் ஜியோவின் 9.99% பங்குகளை 5.7 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதாவது இந்திய மதிப்பின்படி 43,574 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டன. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த சில்வர் லேக் எனும் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவின் ஒரு சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது. ஆம் இந்நிறுவனம் ஒரு சதவிகித பங்குகளை ரூ 5,655.75 கோடிக்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த தகவ்ல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் #RelianceJio என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது கூடுதல் தகவல்.