ஃபேஸ்புக்: 600 மில்லியன் பாஸ்வோர்ட்கள், குறைப்பாட்டை சுட்டிக்காட்டிய பாதுகாப்பு நிபுணர்
மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்ட்கள் அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ்தான் முதலில் சுட்டிக்காட்டினார். ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் 600 மில்லியன் பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டிலிருந்து லாகின் பாஸ்வேர்ட்கள் இவ்வாறு வெளியாகியிருக்கலாம் என்கிறார் பிரையன்..
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறு ஒன்றை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, பிரையன் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்..