ஆட்கொல்லி எபொலா வைரஸினால், இதுவரை 84 பேர் தமது நாட்டில் இறந்திருப்பதாக கினியா நாட்டிலுள்ள சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அண்டைய நாடான லைபீரியாவில் 7 பேருக்கு நோய் பீடிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எபோலா வைரஸால் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலியானதாக கினியாவில் இருந்து வந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.
அந்த நோய் தனது சகோதரிக்குத்தான் முதலில் தொற்றியதாகவும், அவர் இறந்து, அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் சென்றதை அடுத்து கிராமத்தில் இருந்த ஏனையவர்களுக்கும் அது தொற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கினியாவுடனான எல்லையை செனகல் மூடியதை அடுத்து, பல லாறி ஓட்டுநர்கள், இடையில் தடைப்பட்டுள்ளனர்.