செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 26 ஏப்ரல் 2020 (13:29 IST)

சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் : கொரோனா பரப்ப வீசப்பட்டதா?

சென்னை கொருக்குப்பேட்டை சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகள் கொரோனா பரவுவதற்காக வீசப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. 
 
நான்கு 100 ரூபாய் நோட்டுகள் மற்றும் ஒரு 50 ரூபாய் நோட்டும் சாலையில் கிடந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை புகைப்படம் எடுத்து, இது கொரோனா தொற்று பரப்புவதற்காக அப்பகுதியில் வீசப்பட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.
 
இது குறித்து தகவல் அறிந்த ஆர்.கே நகர் போலீசார் ரூபாய் நோட்டுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த ரூபாய் நோட்டுகளையும் அங்கிருந்து எடுத்து அப்புறப்படுத்தினர்.
 
இந்த வதந்தியை பரப்பிய நபர்களை கண்டுபிடிப்பது குறித்து காவல் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்ற வதந்தி பரவ காரணமாக இருந்த ரூபாய் நோட்டுகளை காவல் துறையினர் சேகரித்து எரித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.