1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (13:46 IST)

நாகப்பட்டினத்தில் கடல் போல் காட்சியளிக்கும் விளைநிலம்

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
 
நாகப்பட்டினம் மாவட்டம் வடகுடி தெத்தி ,பாலையூர் ,செல்லூர் ,திருக்குவளை , திருமருகல்,கீழ்வேளூர்,திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
 
பாலையூர் பகுதியில் விவசாய நிலம் கடல் போல் காட்சி அளிக்கின்றது. தாளடி நடவுக்கு தயாராக இருந்த நாற்றுகள் மழையில் முழ்கி மிதந்து வருகின்றன.
 
கடன் வாங்கி சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
 
மேலும் நாகை மாவட்டத்தில் கனமழை அதிகபட்சமாக திருப்பூண்டியில் 30 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
நேற்று வானிலை மையம் நாகைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தாலும் ரெட் அலர்ட் அளவைப் போல நேற்று மதியம் பெய்த மழை இரவிலும் தொடர்ந்தது. தற்போது பகலிலும் மழை பெய்து வருகிறது.
 
குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது வீட்டிற்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வீட்டில் தங்க முடியாமல் அருகில் உள் புயல் பாதுகாப்பு கட்டடம், பள்ளிகள் மற்றும் மண்டபங்களில் தஞ்சமடைந்தனர். அங்கு அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக குடிநீர், உணவுகள் மற்றும் மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.