புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By sinoj
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (23:16 IST)

கொழும்பு − முகத்துவார பகுதியில் மின் தடை காரணமாக வாயிலில் நிற்கும் ஊழியர்கள்

இலங்கை முழுவதும் 7 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபட்டமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.7 மணித்தியாலங்களின் பின்னர் நாட்டின் சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.இலங்கையில் இதற்கு முன்னர் 2009, 2015 ஆகிய ஆண்டுகளில் நாடு தழுவிய ரீதியில் மின்சாரம் தடைபட்டதுடன், 2016ம் ஆண்டு இரண்டு தடவைகள் இவ்வாறு நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

தற்போது மின் பழுது ஏற்பட்டுள்ள கெரவவபிட்டி மின் நிலைய கட்டுமானப்பணிகள் 2007, நவம்பர் மாதம் தொடங்கி இரு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டன. முதலாவது கட்ட திட்டம், 10 மாதங்களிலும், இரண்டாவது கட்ட திட்டம், 2010-ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்பட்டது.

எண்ணெய் மூலம் எரியூட்டப்படும் அனல் மின் நிலையம் மூலம் தினமும் 424 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் கிட்டத்தட்ட 12 சதவீத மின் தேவையை இந்த மின் நிலைய உற்பத்தி பூர்த்தி செய்து வருவதாக அறியப்படுகிறது.