திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:59 IST)

பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் ...நட்சத்திரங்கள் வாழ்த்து

ஜென்டில் மேனாக ஆரம்பித்த அவரது சினிமா வாழ்க்கை காதலனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, ஜீன்ஸாக உலக தரத்தில் தமிழ் சினிமாவைக் கொண்டு சென்றார். முதல்வன் படத்தில்  அரசியல், இந்தியன்  படத்தில் ஊழலை அடையாளம் காட்டினார்.

அந்நியனில் 100 சண்டைக் கலைஞர்களுடன் மிரட்டல் சண்டைக் காட்சிகள், பாய்ஸில் விதவிதமான ஆங்கில்களில் ஷாட்கள்,  ரோபோவில் புதிய தொழில்நுட்பம் , நண்பனாக ரீமேக், ரஜினியை இயக்கி சிவாஜி என்ற மெகா பட்ஜெட் படம், ஐ, ரோபோ 2 என உலகத்தரத்தில் படங்களை இயக்கிவரும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். எனவே பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இவர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடன் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர் ஆவார்.