ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (11:25 IST)

இரண்டு ஆண்கள் பாலுறவு கொள்ளும் காட்சியை ட்விட்டரில் பகிர்ந்த அதிபர்!

கார்னிவல் விழாவுக்கு வந்திருந்த குறிப்பிட்ட இரண்டு நபர்களின் ஆபாச வீடியோவை, பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ டிவிட்டரில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
விழா குறித்த உண்மையை வெளிக்கொண்டு வரவே காணொளியை வெளியிட்டதாக அவர் கூறினார்.
 
ட்விட்டரில் பகிரப்பட்ட காணொளியில் தெருக்களில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரண்டு ஆண்கள் பேருந்து நிழற்குடைக்கு மேல் பாலுறவில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
 
இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமாகிவிட்டதாக பொல்சனாரூ குறிப்பிட்டுள்ளார்.


 
பிரேசிலின் மிகவும் விருப்பமான திருவிழாவையும், ஒருபாலுறவு சமூகத்தைக் குறித்தும் இவ்வாறு பேசியதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.