புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (19:57 IST)

அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்ய வைக்கும் நோக்கில், தம் வீட்டிலேயே அடைத்து வளர்த்து வந்தார்.
அவரது உடலை மீட்க, அந்த விலங்குகள் இரண்டையும் சுட்டுக் கொன்றுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கு முன்னரே வீட்டில் அந்த விலங்குகளை வளர்க்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
 
அவர் அந்த விலங்குகளை அணுக யாரையும் அனுமதிக்கவில்லை.
 
விலங்குகள் நலம் தொடர்பான செக் குடியரசின் சட்டங்களின்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை.T