1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:34 IST)

பில்கிஸ் பானுவின் நீதிக்கான போராட்டம் ....

judge
பில்கிஸ் பானுவின் நீதிக்கான போராட்டம் மிக நீண்டது மற்றும் கொடுங்கனவுகள் நிறைந்தது.
 
சில காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் அவரை மிரட்ட முயன்றுள்ளனர், சாட்சியங்கள் அழிக்கப்பட்டன, இறந்தவர்கள் பிரேத பரிசோதனையின்றி புதைக்கப்பட்டனர், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். கொலை மிரட்டல்களும் அவருக்கு வந்துள்ளன.
 
உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்த பிறகே, முதல் கைது 2004ஆம் ஆண்டு நடந்தது. மேலும், பில்கிஸ் பானுவிற்கு குஜராத் நீதிமன்றம் நீதி வழங்கவில்லை என்று கூறி இந்த வழக்கை மும்பைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
நீதிக்கான அவரது போராட்டம் அவருடைய குடும்பத்திற்கும் இடையூறாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் பலமுறை வீடு மாற வேண்டியிருந்தது.
 
"எங்களால் இன்னும் வீட்டிற்கு செல்ல முடியவில்லை. ஏனென்றால் எங்களுக்கு பயமாக உள்ளது. காவல்துறை மற்றும் மாநில அதிகாரிகள் எங்களைத் தாக்கியவர்களுக்கு எப்போதும் உதவியுள்ளனர். நாங்கள் குஜராத்தில் இருந்தால் எங்களுடைய முகத்தை மூடியிருப்போம். எங்களுடைய வீட்டு முகவரியையும் வெளியே கொடுக்கமாட்டோம்" என்று பில்கிஸ் பானுவின் கணவர் என்னிடம் கூறினார்.
 
இந்த வழக்கு விசாரணையில் இருந்தபோது, பில்கிஸ் பானுவைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் உட்பட பலரும் முன்வைத்தனர்.
 
ஆனால், மும்பை நீதிமன்றம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தபோது, தனக்கு பழிவாங்குவதில் விருப்பமில்லை என்றும், தாங்கள் என்ன செய்தோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டால் போதும் என்றும் பில்கிஸ் பானு என்னிடம் தெரிவித்தார்.
 
"சிறு குழந்தைகளை எப்படிக் கொன்றார்கள், பெண்களை எப்படி பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்பதை அவர்கள் ஒரு நாள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார்.
 
ஆனால், அந்தக் குற்றவாளிகள் மீதமுள்ள வாழ்நாட்களை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறினார்.
 
அவர்கள் விடுதலையான பிறகு, தன்னுடைய மனைவி கலக்கத்திலும் மனச்சோர்விலும் இருப்பதாக பில்கிஸ் பானுவின் கணவர் ரசூல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறினார்.
 
"எங்களுடைய இத்தனை வருடப் போராட்டம் ஒரே தருணத்தில் முடிவுக்கு வந்துவிட்டது" என்றும் ரசூல் கூறினார்.
 
"இந்தச் செய்தி குறித்து யோசிக்க எங்களுக்கு நேரமில்லை. அந்தக் குற்றவாளிகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்க குறி ள் என்பது எங்களுக்குத் தெரியும்" என்றும் அப்போது அவர் தெரிவித்திருந்தார்.