1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 அக்டோபர் 2020 (09:51 IST)

அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள் - `உடனடியாக செயல்பட வேண்டிய நேரமிது` - உலக தலைவர்கள்

ஐநாவின் பல்லுயிர் உச்சி மாநாட்டில் சுமார் 150 உலகத் தலைவர்கள் வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலம் கலந்து கொண்டனர்.

"இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பேசிய ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைவர் இங்கர் ஆண்டர்சன், வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் நமது தவறான மேலாண்மையால் ஏற்பட்ட ஒரு நோயால் நாம் அனைவரும் உள்ளேயே பூட்டிக் கொண்டிருக்கிறோம்," என அவர் தெரிவித்தார்.

"நாம் இயற்கையை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகக் கூடும்,"

சர்வதேச அளவில் பல நாடுகள் கோவிட் -19ஆல் பொதுச் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார இழப்புகள் என போராடிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே இயற்கை பேரழிவை தடுப்பதற்காக உலகத் தலைவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற அவர்கள் மீது மேலும் அழுத்தங்கள் சூழ்ந்துள்ளது.

உலகத் தலைவர்கள் பங்கெடுக்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இதன் நோக்கம் பல்லுயிர் பெருக்கம் அழிவில் உள்ளதால் மனிதகுலம் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசுவதாகும். மேலும் நீடித்த ஒரு மேம்பாட்டிற்காக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

இருப்பினும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் பல்லுயிர் கூட்டத்தில்தான் இயற்கையை பாதுகாப்பதற்கான நாடுகளின் பங்களிப்புகள் தீவிரமாக முன்வைக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் அந்த கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு முன் ஐநாவால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் 2011ஆம் ஆண்டு நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட பல்லுயிர் பாதுகாப்பு குறித்த எந்த ஒரு இலக்கும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.