வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (21:23 IST)

குவைத் மன்னர் காலமானார்.... உலக தலைவர்கள் இரங்கல்

குவைத் மன்னன் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல்சபா இன்று காலமானார். இதனால் பலரும் மன்னர் குடும்பத்திற்கு இரங்கலும் அனுதாபங்களும் தெரிவித்து வருகின்றனர்.

வளைகுடா நாடுகளில் ஒன்றாக குவைத்தில் கடந்த 2006 முதல்  மன்னராக இருந்தவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா. இவர் 926 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் பிறந்தவர் ஆவார். அவர் தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பெட்ரோலியத் துறையில் பெரும் லாபம் ஈட்டிவரும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் இந்தியர்கள் பல லட்சம் பேர் பணியாற்றின்வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் இன்று திடீரென்று காலமானார். உலக நாடுகளி தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி மற்றும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.