வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (23:17 IST)

உக்ரைனில் இருந்து மாணவர்கள் திரும்புவதற்கான பயணச் செலவை அரசே ஏற்கும் - முதல்வர் ஸ்டாலின்

உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில்,  உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைகளுக்குத்  தயார் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன்     அதிபரும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என மாண்புமிகு முதலமைச்சர்  @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.