புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (22:36 IST)

நியூயார்க்கில் புதிய கூடுதல் தடுப்பூசி திட்டம் அமலுக்கு வந்தது

புதிய கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் திட்டம் நியூயார்க் நகரில் நடைமுறைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டால் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
 
நியூயார்க்கில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளரங்க உணவக பகுதிகள் மற்றும் பல பாடநெறிக்கு அப்பாற்பட்ட பள்ளி நடவடிக்கைகளை அணுக முழு தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 
தனியார் துறை ஊழியர்களுக்கான தடுப்பூசி ஆணையையும் நகர நிர்வாகம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
 
இது போன்ற ஒரு நடவடிக்கையை அமெரிக்காவிலேயே முதலாவதாக நியூயார்க் மாகாண அரசு எடுத்துள்ளது.
 
அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்பது ஏற்கனவே அமலில் உள்ளது. நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோவால் இந்த நடவடிக்கை இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது.
 
ஓமிக்ரான் அச்சுறுத்தலை பிற வைரஸ் திரிபுகளை விட இது மிகவும் கொடியதாகத் தோன்றுகிறது. ஆனால், அது லேசான பாதிப்பைக் கொண்டது என்று மேயர் பில் டி ப்ளாசியோ குறிப்பிட்டார்.
 
நியூயார்க்கில் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் கொரோனா பாதிப்புகள் சமீபத்திய வாரங்களில் அதிகமாகியிருக்கிறது.
 
திங்கட்கிழமை முதல்:
 
நியூயார்க்கில் 1,84,000 தனியார் வணிகங்களை பாதிக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் முதலாவது டோஸை தாங்கள் பெற்றுள்ளதை தொழிலாளர்கள் காட்ட வேண்டும். அதன்பிறகு, அவர்கள் இரண்டாவது டோஸின் ஆதாரத்தைக் காட்ட 45 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்
 
உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், காபி கடைகள், துரித உணவகங்கள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைய 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் முழு தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
 
தற்போது, ​​ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள், அந்த இடங்களுக்குள் நுழைய குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றதாக நிரூபிக்க வேண்டும். ஜனவரி 29 முதல், அவர்கள் முழு தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும்.