1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (09:59 IST)

இந்தியாவில் 236 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி!!

இந்தியாவில் 236 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில மாதங்களாக வேகமாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில் தற்போது உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ள ஒமிக்ரானின் பாதிப்புகள் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளன.
 
இந்நிலையில் இந்தியாவில் 236 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 104 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 132 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 65, டெல்லியில் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தெலங்கானா - 24, கர்நாடகம் - 19, ராஜஸ்தான் - 21, கேரளம் - 15, குஜராத் - 14, ஜம்மு - காஷ்மீர் - 3, ஒடிசா - 3, உத்தரப் பிரதேசம் - 2, ஆந்திரப் பிரதேசம் - 2, ஒடிசா - 2 , சண்டிகர், தமிழகம், லடாக், உத்தராகண்ட், மேற்கு வங்கத்தில் தலா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.