இடுக்கி மாவட்ட மண் சரிவில் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் 55 பேர் பலி

Papiksha Joseph| Last Updated: சனி, 8 ஆகஸ்ட் 2020 (14:11 IST)

கோவில்பட்டி அருகே கயத்தாறு பாரதிநகர் பகுதியை சேர்ந்த மக்கள் 55 பேருக்கு மேல் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தனர்.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் பெட்டி முடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இதில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பேரூராட்சி பாரதிநகர் பகுதியிலிருந்து தேயிலை பறிக்கும் வேலைக்கு பலர் குடும்பமாக சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.


தற்போது இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு மண்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் இறந்ததை அறிந்த அவர்களது உறவினர்கள் வீடுகளுக்கு முன்பு திரண்டு கதறி அழுதனர்.பின்னர் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் சென்று இறந்தவர்கள் பட்டியலை வழங்கும் படி கேட்டனர். இதில், சுமார் 55 பேருக்கு மேல் மண்ணில் புதைந்து இறந்தது தெரிந்தது. இறந்தவர்கள் குறித்து கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் தகவல் சேகரித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :