வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (18:26 IST)

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: விருச்சிகம்

கிரகநிலை:
ராசியில்  சூர்யன்  - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  - தைரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  ராஹு-  அயன, சயன, போக ஸ்தானத்தில் - புதன், செவ்வாய்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பலன்:
எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிக்கும் ஆற்றலு டைய விருச்சிக ராசியினரே இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். கேட்ட இடத்தில் இருந்து பண வரவுகள் தாராளமாக வரும்.

குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.

தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும். மாணவர்களுக்கு உங்களது செயல் களுக்கு பாராட்டு கிடைக்கும். கல்வியில் வெற்றி அடைய மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

விசாகம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் லாபகரமாக  நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள். குடும்பத்தில் அனைவரையும் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைப்பீர்கள். உங்களுக்கென்று உள்ள பாதையில் அவர்களையும் அழைத்துச் செல்வீர்கள். ஆடை, ஆபரணங்களில் நாட்டம் அதிகம் இருக்கும். 

அனுஷம்:
இந்த மாதம் எடுத்த காரியம் வெற்றி பெறும். அதனால் மேல் அதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.  கணவன் மனைவிக்கிடையே இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது எதிர்பார்த்த ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.  அலுவலகத்தில் அனைவரின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

கேட்டை:
இந்த மாதம் வாக்கு வன்மையால் காரியங்கள் வெற்றி பெறும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனசஞ்சாரம் நீங்கி நிம்மதி உண்டாகும். பெரியோர் பாராட்டு கிடைக்கும். தொழிலில் நல்ல அபிவிருத்தி முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று மூலதனத்துடன் தொழில் ஆரம்பிக்க ஆசைப்படுவீர்கள்.

பரிகாரம்: தினமும் சூர்ய நமஸ்காரம் செய்யுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7