புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (18:22 IST)

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: கன்னி
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சூர்யன்  -  சுக  ஸ்தானத்தில்  சுக்ரன், குரு, சனி , கேது  -  பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்   ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை  செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே,  நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த மாதம் பணவரத்து அதிகமாகும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடை வீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்த யங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.

கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது.  மனதில் உற்சாகம் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் நல்ல லாபகரமாக நடந்தேறும். சிறு வியாபாரிகள் கூட நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய விஸ்தரிப்புத் திட்டங்களில் ஈடுபடலாம். புதிய தொழில் ஆரம்பிக்கலாம்.

அஸ்தம்:
இந்த மாதம் மனத்திருப்தியுடன் காரியங்களை  செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்ளுக்கு அலுவலகத்தில் இருந்த பிரச்சினை கொடுக்கும் நபர்கள் ஒதுங்கி விடுவார்கள். சக ஊழியர்களிடமிருந்த கருத்து வேற்றுமை மறையும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு வேலையில் சேரக் கூடிய அழைப்பிதழ் வரலாம்.

சித்திரை 1, 2, பாதம்:
இந்த மாதம் டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். விரும்பியபடி காரியங்கள் நடக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். லாபம் எதிர்பார்த்தபடி  இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் ஏற்படுவதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். ஆற்றல் அதிகரிக்கும். கடந்து சென்ற காலத்தை நினைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். உழைப்பு ஒன்றே துணையாக வைத்து முயற்சி செய்யுங்கள். நல்ல முன்னேற்றம், வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வணங்கி சுந்தர காண்டம்  படியுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29, 30