புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (18:15 IST)

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மிதுனம்

கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   பஞ்சம ஸ்தானத்தில்  புதன், செவ்வாய் -  ரண, ருண ஸ்தானத்தில் சூர்யன்  -   களத்திர ஸ்தானத்தில் சுக்ரன், குரு, சனி , கேது -  அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
தோல்வியை வெற்றி படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசியினரே, இந்த மாதம் வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். ஒற்றுமை குறைந்து காணப்படும். எனினும் இவைகளை களைந்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள். அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.

அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.

பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்களுக்கு  கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. மூத்தவர் ஒருவரிடமிருந்து  உங்களுக்கு நிகர் நீங்களே என்ற பாராட்டைப் பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் தொழிலில் சக பணியாளர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் உண்டாகலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சிறந்த மதிப்பெண் பெறுவதற்கு இப்போதிலிருந்தே சிரத்தை எடுத்து படித்து வருவீர்கள். மனம் முழுதும் படிப்பில் லயிக்கும். ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். எதிலும் மெத்தன போக்கு காணப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம்.  கோபத்தை குறைப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சிறந்த முடிவுகளை எடுக்கப் போராடுவீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்களுக்கு உயர்வான வாரமிது.  வேலைக்கு விண்ணப்பித்து காத்து வருபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் துளசியைக் கொண்டு பெருமாளை வணங்குங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23