திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:32 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - கன்னி

கன்னி ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)
 
கிரகநிலை:

தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ராசியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் மனம் தெளிவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். முகத்தில் மலர்ச்சியைக் காண முடியும். உங்களின் இஷ்ட தெய்வங்களின் ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். பிடித்தவர்களைச் சந்தித்து மனதில் இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்வீர்கள்.

குடும்பத்தை பொறுத்தவரை அவ்வப் போது பிரச்சினைகள் தலை தூக்கும். பங்காளிகள் பிரச்சினைகளுக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்களிடன் நீங்கள் கோபமின்றி பேசுங்கள். அவர்களே ஆச்சரியமாக ஒதுங்கி விடுவார்கள். கணவன் -  மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு பிரிந்திருக்கக் கூடும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளுவீர்கள். திருமண முயற்சிகளில் ஈடுபடலாம்.

தொழிலில் புதிய விஸ்தரிப்புத் திட்டத்தில் ஈடுபடாமல் இருப்பது தற்சமயம் நல்லது. நிதி நிறுவனங்களிடமிருந்து பண உதவிகள் கிடைப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்படும். தொழிலாளர்களிடம் விட்டுக்கொடுத்து போவது தொழிலை எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் குடும்ப விஷயங்களை சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மட்டுமே வேலையில் நல்லதாக திறம்படச் செய்ய முடியும். யாரையும் நம்பி எந்த வேலையிலும் இறங்க வேண்டாம்.

பெண்கள் நினைத்ததை கடைப்பிடித்து வருவது மிக முக்கியம் . வேலை பார்த்து வரும் பெண்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

மாணவர்கள் ஞாபக சக்தியும், கிரகிப்புத் திறனும் குறைந்து காணப்படும். அதனால் படிப்பில் கவனம் செல்லாது.

அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். இருந்த போதிலும் சுக்கிரனுடைய சாரம் சிறப்பாக இல்லாததால் பணிச்சுமை ஏற்படும்.

உத்திரம்:

இந்த மாதம் தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். தந்தை வழி தொழில் செய்வோருக்கு அதிக லாபம் ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய கால கட்டம். 

சித்திரை:

இந்த மாதம் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

பரிகாரம்:  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.