1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (15:47 IST)

பிப்ரவரி 2021 மாத ஜோதிடப் பலன்கள்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

 
தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தும் மேஷ ராசியினரே நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர் இந்த மாதம் எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். 
 
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். 
 
குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
 
கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். 
 
அரசியல்துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 11ல் இருப்பதால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.
 
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். 
 
அஸ்வினி:
இந்த மாதம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும். 
 
பரணி:
இந்த மாதம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும். 
 
கார்த்திகை:
இந்த மாதம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சூரியன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
 
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி