புதன், 10 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:07 IST)

பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25

பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 7, 16, 25
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
நியாயமுள்ளவர்களுக்காக பாடுபடும் குணமுடைய ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். பெண்களுக்கு முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வியில் மேன்மை ஏற்படும். 
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை சனிக்கிழமை அன்று அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.