பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 6, 15, 24

Sugapriya Prakash| Last Modified திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:04 IST)
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 

 
எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்லும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எந்த ஒரு சின்ன விஷயம் கூட லாபமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூமி, வாகனம் மூலம் ஆதாயம் உண்டாகும். பண வரத்து கூடும்.

தொழில் வியாபாரத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி மன நிம்மதி அடைவீர்கள். செயல் திறமை மூலம் கடினமான பணியையும் சிறப்பாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியம் நடக்கும்.

பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டும் கிடைக்கும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று குல தெய்வத்தை பூஜை செய்து வணங்க எல்லா காரியமும் வெற்றியாக முடியும். 


இதில் மேலும் படிக்கவும் :