பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 9, 18, 27

Sugapriya Prakash| Last Modified திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:13 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு....

 
எந்த ஒரு விஷயத்தையும் சீக்கிரமே கிரகித்துக் கொள்ளும் தன்மை உடைய ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். அரசியல்துறையினருக்கு இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று முருகனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.


இதில் மேலும் படிக்கவும் :