வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 07/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசியினருக்கு குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் ஏற்படக்கூடும். கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.  பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
 
2. துலாம்:
 
இன்று துலாம் ராசியினருக்கு காரிய தடைகள், எதிலும் தாமதமான போக்கு காணப்படும். வெளியூர் பயணங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.  கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
 
3. தனுசு:
 
இன்று தனுசு ராசியினருக்கு குடும்பத்தில் டென்ஷன் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கோபத்தை கைவிடுவது நல்லது. காரிய தாமதம் ஏற்படக்கூடும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசியினருக்கு மாணவர்கள் கூடுதலாக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. வீண் அலைச்சல், காரிய தாமதம், டென்ஷன் உண்டாகலாம். கவனம்  தேவை. 
 
5. மீனம்:
 
இன்று மீன ராசியினருக்கு தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சலும், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல்  பணிசுமையால் டென்ஷன் இருக்கும்.