ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 06/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவர், பணவரவு நன்றாக இருக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்கள் தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடை நீங்கி, வியாபார முன்னேற்றதிற்கு உதவும். குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வருகையை எதிர்பார்க்கலாம்.
 
3. மிதுனம்
 
இன்று மிதுன ராசிக்காரர்கள் எடுத்த காரியங்களை நல்ல முறையில் முடியும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு, திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகை செய்யும். எதிலும் நன்மை தரும் நாளாக அமையும்.
 
4. துலாம்
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு மாணவர்கள் கல்வியில் விருப்பம் அதிகம் இருக்கும். பணவரவு மற்றும் காரிய வெற்றி இருக்கும். காரியங்கள் சாதகமாக நடக்க  சற்று யோசித்து செயல்படவேண்டும்.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெரியோர் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். காரிய  அனுகூலம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கும்.
 
6. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் சிறக்கும். புதிய வாடிக்கையாளர்களும் லாபமும் உண்டாகும். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் அமையும். எதிலும் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும்.