1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 06/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம் 

1. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு ஏற்படும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
 
2. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்களும், பார்ட்னர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வீண் அலைச்சலும், குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகும் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம்.
 
3. கன்னி
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை வராமல் தடுக்க சற்று நிதானமாக இருப்பது நல்லது, உறவினர்களுடன் வாக்கு  வாதத்தை தவிர்ப்பது நல்லது. காரிய தடை, தாமதம் ஏற்படக்கூடும்.
 
4. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு விலகிச் சென்றவர்கள் விரும்பி வரக்கூடும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. 
 
5. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் உள்ள நபர்களின் நடவடிக்கை டென்ஷனை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் தேவை.
 
6. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடவேண்டும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்காது. மன தைரியத்துடன் செயல்படவேண்டும். வீடு, வாகனங்கள் தொடர்பான செலவுகள் அதிகமாகும்.