புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 25/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். 
 
சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம்  செலுத்துவது நல்லது.
 
துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். யாரிடமும் நிதானமாக  பேசுவது நன்மை தரும்.
 
மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.
 
கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை  மேலோங்கும்.
 
மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு வீண் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும்.