1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:08 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 22/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
1. கடகம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனமாக இருப்பது நல்லது. விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
 
2. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
3. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருக்கும்.
 
4. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்குகாரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது  நல்லது. 
 
5. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள்  உண்டாகலாம்.
 
6. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும்.