இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 23/09/2020
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
1. மேஷம்:
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
2. ரிஷபம்:
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
3. தனுசு:
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
4. மகரம்:
இன்று மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
5. கும்பம்:
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.