திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 23/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
1. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். மனக்கவலை ஏற்பட்டு  நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம்  தேவை.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது. மற்ற கருத்து  சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும்  அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
 
5. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்கள் கடினமானவை போல தோன்றும்.
 
6. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை  விட்டு விலகி செல்லலாம்.
 
7. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து  பேசுவது நல்லது.