1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 04/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். உறவினரால் ஒரு தொல்லைகளும், மேலதிகாரிகளால் தொல்லையும் இருக்கும். கலைத்துறை  சார்ந்தவர்கள் கவனமாக இருக்கவேண்டும். 
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது சிறிய அளவிலான வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை. வெளியிடங்களில் எதிர்ப்புகள்  அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்படும்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் தடை இருக்கும். திட்டமிட்டு செய்வதன்மூலம் சமாளிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனம் தேவை.  எதிர்பாராத அலைச்சல் உண்டாகும்.
 
4. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து, வீண் விவகாரங்களில் தலையிடாமல் தள்ளி இருப்பது நன்மை தரும். தேவையற்ற  பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கவேண்டி வரும். மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். நன்மை தீமை  பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்தாலும், நட்பு வட்டத்தில் நிதானம் தேவை.