திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 8 ஜூன் 2017 (23:30 IST)

அடுத்த முதல்வர் விஜயசாந்தியா? என்னங்கடா இது புதுக்குழப்பம்

அடுத்த முதல்வர் விஜயசாந்தியா? என்னங்கடா இது புதுக்குழப்பம்
அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும் என்பது ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தெரியாது, அவர் இல்லாதபோது கேட்கவே வேண்டாம். நிமிடத்துக்கு நிமிடம் காட்சிகள் மாறி வருகிறது.



 


எடப்பாடி பழனிச்சாமி என்றால் யார் என்றே தெரியாத நிலையில் திடீரென அவர் முதல்வரானார். இப்போது அவருக்கும் ஆப்பு தயாராகிவிட்டது.

இந்த நிலையில் பெங்களூர் சிறையில் சசிகலாவை ரகசியமாக சந்தித்துள்ளாராம் நடிகை விஜயசாந்தி. தெலுங்கானாவில் தனது பருப்பு வேகவில்லை என்று தமிழக அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள விஜயசாந்தி, விரைவில் அதிமுகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போகிற போக்கை பார்த்தால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்றே தோன்றுகிறது. எதையும் தாங்கும் இதயம் படைத்த தமிழன் இதையும் தாங்கி கொள்ள வேண்டியதை தவிர வேறு வழியில்லை