1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. So many live telecast programmes in TV

ஒரே லைவ் மயம்: என்ன ஆச்சு தொலைக்காட்சிகளுக்கு?

television
கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சிகளில் லைவ் நிகழ்ச்சி என்பதே மிகவும் அரிதாகவே இருக்கும். ஆனால் தற்போது எடுத்ததெற்கெல்லாம் லைவ் நிகழ்ச்சி தான். அதுவும் நேற்று லைவ் நிகழ்ச்சிகளால் கிட்டத்தட்ட பல தொலைக்காட்சிகள் பிசி



 
 
ஒரு பக்கம் இளையதளபதி விஜய்யின் 'மெர்சல்' ஆடியோ விழாவின் லைவ் ஒளிபரப்பு. இன்னொரு பக்கம் ஒரு செய்தி சேனலில் 'ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கூறும் தமிழருவி மணியனின் லைவ் நிகழ்ச்சி. இன்னொரு பக்கம் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இன்னொரு பக்கம் சேப்பாக்கம் மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதிய டி.என்.பி.எல் போட்டியின் லைவ். இந்த இத்தனை லைவ் நிகழ்ச்சிகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிகழ்ந்ததால் பொதுமக்கள் ரிமோட்டுக்கு அதிக வேலை கொடுத்தனர்.
 
இது போதாதென்று பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு. இன்று கமல்ஹாசன், காயத்ரியை வெளியேற்றும் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சியையும் பெரும்பாலானோர் ரசித்தனர்.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
பாஜக தலைமையில் பிரமாண்ட கூட்டணி: தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்