1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TKS Ilangovan says about O Panneer selvam,

மகனை மந்திரி ஆக்க பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவ: டி.கே.எஸ். இளங்கோவன்

ஓபிஎஸ்
மகனை மந்திரி ஆக்க பாஜகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு: டி.கே.எஸ். இளங்கோவன்
மகனை மந்திரி ஆக்கவே முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் பாஜகவுக்கு ஆதரவு தருகிறார் என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு இன்று காலை முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் கூறியிருப்பதாவது: பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு மகனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில்தான் செயல்பட்டு வருகிறார் என்றும் அதனால்தான் அவர் ஒன்றிய அரசு குறித்து தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்
 
இந்த நிலையில் மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றப்பட உள்ளது என்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிலர் மந்திரியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் வகுப்பில் ஆபாச செய்தி அனுப்பியவர் கைது!