திங்கள், 26 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (06:29 IST)

நான் செய்ய முடியாது! நீங்கதான் செய்யணும்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி

நான் செய்ய முடியாது! நீங்கதான் செய்யணும்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி
தமிழகம் உள்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் 'விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று விரும்பும் மாநில அரசுகள், அவர்களின் சொந்த நிதியிலிருந்தே அதைச் செய்ய வேண்டும்' என்றும் மத்திய அரசு இதற்கு நிதி தராது என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கறாராக கூறிவிட்டார்.



 


இதற்கும் ஒருசில மாநிலங்கள் ஒப்புக்கொண்டு விவசாய கடன்களை தள்ளுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அருண்ஜெட்லியின் இந்த அறிவிப்புக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது மத்தியில் ஆளும் அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்துதான் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே சொன்னபடி அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநிலங்கள் மீது அதைச் செய்யும்படி பணிக்கக் கூடாது.' என்று தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.