வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (23:12 IST)

அரசியலுக்கு பொலிட்டிக்கல் சயின்ஸ் படிச்சவங்க தான் வரணும். நடிகர்கள் தேவையில்லை! கார்த்திக் சுப்புராஜ்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் தொடங்கி விஷால், விஜய் வரை பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை இருக்கும் நிலையில் மீண்டும் அரசியல் தலைவராக ஒரு திரைபிரபலமா? என்ற கேள்வி பலர் மனதில் எழாமல் இல்லை. இதுகுறித்த அதிருப்தி கொஞ்சம் தெளிவான திரையுலக பிரபலங்களுக்கே கூட இருக்கின்றது.



 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்த பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதுகுறித்து கூறியபோது, '``நம்ம ஊர்ல பல அரசியல்வாதிகள் சினிமாவுல இருந்துதான் வந்திருக்காங்க. இனி வரப்போறவங்க ‘பொலிட்டிக்கல் சயின்ஸ்’ங்கிற பாடத்தைப் படிச்சவங்க, அதை உள்வாங்கிட்டவங்களா இருந்தா நல்லா இருக்கும். அதனால, இவங்க வந்தா எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனா, கவர்ச்சி, கற்பனைகளுக்கு மயங்கி ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தா, நிச்சயமா இப்போ படுற கஷ்டங்களையெல்லாம் அப்பவும் படவேண்டியதிருக்கும். அதனால, அரசியலுக்கு வரத் தகுதி இருக்குனு நினைக்கிற சினிமா பிரபலங்கள் தாராளமா அரசியலுக்கு வாங்க. அவங்களை ஏத்துக்கிறதா, நிராகரிக்கிறதானு மக்கள் முடிவு பண்ணட்டும்!” என்று கூறினார்.
 
உண்மையாகவே இன்னொரு அரசியல் தலைவர் திரையுலகில் இருந்து தேவையில்லை என்பதே பலருடைய எண்ணமாக உள்ளது. போதும், நடிகர்களை நம்பி ஏமாந்தது. தயவுசெய்து நல்ல அறிவாளிகள், தன்னலம் இல்லாத ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று அரசியல் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர்.