ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 21 செப்டம்பர் 2017 (13:11 IST)

ஆம் ஆத்மி தலைவர் ஆகிறாரா கமல்? அரவிந்த கெஜ்ரிவாலுடன் சந்திப்பு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அரசியல் கருத்துக்களை தீவிரமாக பேசி வரும் நிலையில் அவர் விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிப்பார் அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேருவார் என்று கூறப்பட்டது.



 
 
இந்த நிலையில் கமல்ஹாசன் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறிய நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
 
ஆம், இன்று சென்னை வரும் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், கமல்ஹாசனை சந்திக்கின்றார். இந்த நிலையில் கமல்ஹாசன் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவராக நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் ஆம் ஆத்மி கட்சியில் கமல் சேருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்